Odia television actress death: அடுத்தடுத்து தொடரும் மர்மம்! பிரபல சீரியல் நடிகை சடலமாக மீட்பு! வீட்டுக்குள் சிக்கிய கடிதம்!
ராஷ்மிரெஜா ஓஜா‘Kemiti Kahibi Kaha தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர்.
![Odia television actress death: அடுத்தடுத்து தொடரும் மர்மம்! பிரபல சீரியல் நடிகை சடலமாக மீட்பு! வீட்டுக்குள் சிக்கிய கடிதம்! Odia television actress death: Family points finger at deceased's 'live in partner', seeks probe Odia television actress death: அடுத்தடுத்து தொடரும் மர்மம்! பிரபல சீரியல் நடிகை சடலமாக மீட்பு! வீட்டுக்குள் சிக்கிய கடிதம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/20/da197fd3030721446480f84f47cc2cca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒடிசா மாநிலத்தில் பிரபல சீரியல் நடிகை (Rashmirekha Ojha) ராஷ்மிரெஜா ஓஜா தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலாம மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளின் மரணத்திற்கும் அவருடன் தங்கியிருந்த சந்தோஷ் பாட்ராவிக்கும் (Santosh Patra ) தொடர்பு இருப்பதால நாஷ்மிரெஜாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
Nayapalli நகரில் உள்ள வீட்டில் ராஷ்மிரெஜா ஓஜா வாடைக்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவரின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை தெரிந்து கொண்ட வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தூக்கில் தொங்கியபடி இருந்த ராஷ்மிரெஜா ஓஜாவின் உடலை நேற்று இரவு 10.30 மணியளவில் மீட்டிருக்கின்றனர். நடிகை தங்கியிருந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதை தற்கொலை என்று காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் ராஷ்மிரெஜா ஓஜாவின் மரணத்திற்கு காரணமாக யாரையிம் குறிப்பிடவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின், ராஷ்மிரெஜா ஓஜாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Jagatsinghpur பகுதியில் ராஷ்மிரெஜா ஓஜா சந்தோஷ் பாட்ராவுடன் ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருக்கிறார். பின்னர், இருவரும் பிரிந்துவிட்டதாவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ராஷ்மிரெஜா ஓஜா சந்தோஷ் பாட்ராவுடன் திருமணம் செய்துகொண்டதாவும், ஓஜாவில் மரணத்திற்கும் சந்தோஷிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிரெஜா ஓஜாவின் மரணத்திற்கு சந்தோஷ் காரணமாக இருக்கலாம் என்று ராஷ்மிரெஜா தந்தையும் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)