மேலும் அறிய
Advertisement
Crime : மல்லிகை வீதியில் குக்கர் சாராயம் காய்ச்சிய கொலை வழக்கு குற்றவாளி..
வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சாராய பாட்டில்கள், ஊறல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை கோமதிபுரம் மல்லிகை வீதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்குரிய வகையில் வசிக்கும் நபர் ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
#madurai | மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து சாராய பாட்டில்கள் மற்றும் ஊறல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
— Arunchinna (@iamarunchinna) July 21, 2022
further reports to follow - @abpnadu #police | #alcohol | #crime | @Muthuku17716686 @jp_muthumadurai
| @slbala | @Ajithbala1222 pic.twitter.com/YdVGjlQv2e
அதன் பேரில் போலீசார் மல்லிகை வீதிக்கு சென்று அந்த வீட்டில் வசித்து வருபவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஸ்ரீ ரங்கபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவரஞ்சித் (37) என்பதும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது வீட்டின் அருகே உள்ள புதரில் அடுப்பு வைத்து குக்கர் உதவியுடன் சாராயம் காய்ச்சி வந்ததும் தெரிய வந்தது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ABP EXCLUSIVE : ஓபிஎஸ் ஏன் ஒதுக்கப்படுகிறார் மனம் திறந்த மாஜி அமைச்சர் ஜி.பாஸ்கரன்..!
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த 12 சாராய பாட்டில்கள் மற்றும் இரண்டு பெரிய பீப்பாய்களில் போடப்பட்டிருந்த சாராய ஊறல், மான் கொம்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிவரஞ்சித்தை கைது செய்தனர். மதுரை நகரின் மையப் பகுதியில் வீட்டிலேயே ஒருவர் சாராயம் காய்ச்சி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறை கூடுதல் சோதனையிட திட்டமிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் செல்போன் எண் மூலம் யாரியம் தொடர்பு கொண்டுள்ளார் என்பதன் அடிப்படையில் விசாரணை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion