Brutal Murder : ஜாமினில் வந்த குண்டாஸ் குற்றவாளி மாடியில் வைத்து மர்டர்!

கோகுல் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  23 ஆம் தேதி குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

FOLLOW US: 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாபாதர் தெருவை சார்ந்தவர் மணி.  இவரது மகன் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (வயது 35). இவர் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் வழிப்பறி ,கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது .

 ராணிப்பேட்டை சேர்ந்த கோகுல் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  23 ஆம் தேதி குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

 Brutal Murder : ஜாமினில் வந்த குண்டாஸ் குற்றவாளி மாடியில் வைத்து மர்டர்!

ஒரு ஆண்டு சிறைதண்டனைக்கு பின்பு  கடந்த 4-ந் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன். ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அவருடைய நண்பர்கள் வீட்டில் தலைமறைவாக தங்கி வந்துள்ளார் .

Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

ஞாயிற்றுக்கிழமை (நேற்று ) மதியம்  காவனூர் ரோடு போலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது நண்பர் கண்ணன் என்பவர் வீட்டின் மாடியில்  அமர்ந்து மதுஅருந்தி கொண்டு இருக்கும் பொழுது , வீச்சு அறிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கண்ணன் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை அவர்கள் கொண்டு வந்த கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்க ஆர்மபித்தனர் . தலை , முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் . Brutal Murder : ஜாமினில் வந்த குண்டாஸ் குற்றவாளி மாடியில் வைத்து மர்டர்!

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் , நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையிலான  போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் மிதந்துகிடந்த  கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Brutal Murder : ஜாமினில் வந்த குண்டாஸ் குற்றவாளி மாடியில் வைத்து மர்டர்!
 
இதுகுறித்து செய்தியாள்களிடம் பேசிய அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் , சென்ற வருடம் கோகுல் என்பவரை கொலை செய்ததற்காக  பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறோம் .

Health Minister interview : இன்னும் 15 நாளில் கொரோனாவுக்கு முடிவு - நம்பிக்கை தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்

கார்த்திகேயனை கொலை செய்தமர்ம கும்பல் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றோம் என்று தெரிவித்தார் . ஜாமீனில் வந்தவர் பட்டப்பகலில் வீடுபுகுந்து சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோஃபர் கபில் மீதான மோசடி புகார் : 108 பேரிடம் விசாரணை

Tags: murder Ranipet revenge broad-day light ranipet district police accused released in bail .

தொடர்புடைய செய்திகள்

”பாபா குழந்தைகளை தொடுவார்.. ஆனா அது Good Touchதான்” : சுஷில்ஹரி பள்ளி நிர்வாகிகள் பேட்டி..!

”பாபா குழந்தைகளை தொடுவார்.. ஆனா அது Good Touchதான்” : சுஷில்ஹரி பள்ளி நிர்வாகிகள் பேட்டி..!

திண்டுக்கல் | பாட்டில், பணம், தகராறு : மதுவெறியில், நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை..!

திண்டுக்கல் | பாட்டில், பணம், தகராறு : மதுவெறியில், நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை..!

SivaShankar Baba : கைதுசெய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! நடந்தது என்ன?

SivaShankar Baba : கைதுசெய்யப்பட்ட  சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! நடந்தது என்ன?

Rohini Compliant Against Kishor | ரகுவரன் குறித்து இழிவான பதிவு - கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்

Rohini Compliant Against Kishor | ரகுவரன் குறித்து இழிவான பதிவு - கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்

PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

டாப் நியூஸ்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!