மேலும் அறிய

Crime | ”ஏன் Fees கட்டல” : கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, மகன் கைது..

கட்டணம் கட்ட மறுத்ததால் கொலை செய்துவிட்டு சட்டையை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, சேஷாத்ரியின் உடலை ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசி, போலீசாருக்கு அவர்களே தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அம்போலி பகுதியை சேர்ந்தவர்  சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி. 54 வயது ஆகும் இவர் தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெய்ஷீலா என்பவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு 26 வயதில் ஒரு மகன் உள்ளார். பொறியியல் பட்டதாரியான அவர்களது மகன் பெயர் அரவிந்த். இந்நிலையில், சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர், சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தினர். விசாணையில் சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்தனர். சேஷாத்ரி இதற்கு முன்னதாகவும் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்றும் அவர்கள் காப்பாற்றி அழைத்து வருவார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். அவர்கள் இருவரும் கூறுவதில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு, அவர்களது வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டை சோதனை செய்ததில் அவர்கள் வீட்டு வாஷிங் மிஷினில் சேஷாத்ரியின் சட்டை ஒன்று ரத்தக் கறையுடன் இருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Crime | ”ஏன் Fees கட்டல” : கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, மகன் கைது..

கண்டுபிடிக்கப்பட்ட சட்டையினால் சந்தேகமடைந்த போலீசார் ஜெய்ஷீலா மற்றும் அரவிந்திடம் நடத்திய குறுக்கு விசாரணையில், இருவரும் சேஷாத்ரியை கொலை செய்துவிட்டு உடலை மாடியில் இருந்து தூக்கி எறிந்த உண்மை தெரியவந்தது. மேலும் விசாரணையில், சேஷாத்ரிக்கும் மனைவி மற்றும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு பல வாக்குவாதம் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்மாவும் மகனும் நேற்று முன்தினம் அவரை கொலை செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் பிரச்சனை முற்றியதில், சேஷாத்ரியின் தலையை கட்டிலில் முட்டி பலமாக தாக்கி உள்ளனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சேஷாத்ரி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனால், பயந்துப்போன ஜெய்ஷீலா மற்றும் அரவிந்த் சேஷாத்ரி இருவரும் உடலை 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசி தடயத்தை அழிக்க முயன்றுள்ளனர் என்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

Crime | ”ஏன் Fees கட்டல” : கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, மகன் கைது..

மகனின் கல்லூரி மேற்படிப்புக்கான கட்டணத்தை செலுத்த மறுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம். நடந்த தகராற்றில் கொலை செயத்துவிட்டு அம்மாவும் மகனும் சட்டையை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, சேஷாத்ரியின் உடலை ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசி, போலீசாருக்கு அவர்களே தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சேஷாத்ரியின் மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு இருவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் மகனின் செயல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Embed widget