போன் பேசியதை கண்டித்த கணவன்; பீரோவை வழித்து எஸ்கேப் ஆன மனைவி!
எந்நேரமும் போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்ததால், பீரோவில் இருந்த நகையோடு இரு குழந்தைகளுடன் மனைவி எஸ்கேப் ஆன சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்சரகத்திற்கு உட்பட்ட கொற்கை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் சந்திரன் எனபவரது மகள் மகேஸ்வரி வயது 36 என்பவரை திருமணம் செய்து கடந்த 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரதிகா வயது 12, மற்றும் ஜனனி வயது 10 ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளாக துபாய் அபுதாபியில் பெயின்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான கொற்கை கிராமத்திற்கு வந்துள்ளார். வந்த நாள் முதல் ராஜ்குமார் மனைவி மற்றும் இரண்டு மகளுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஜுன் 1-ம் தேதி அதிகாலை தூங்கி எழுந்த ராஜ்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த மனைவி மற்றும் தன்னுடை இரண்டு பெண் குழந்தைகளை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் வீட்டு பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை. உடனடியாக தனது மாமனார் சந்திரன் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் மனைவி மற்றும் குழந்தைகளை ராஜ்குமார் தேடியுள்ளார். அவர்கள் மூவரும் எங்கும் கிடைக்காததால், மணல்மேடு காவல்நிலையத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை காணவில்லை என புகார் அளித்துள்ளார். ராஜ்குமாரின் புகாரை பெற்றுக்கொண்ட மணல்மேடு காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் தான் இரவு பகலாக கண்விழித்து கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய தங்க நகைகளை மகேஸ்வரி அடகு வைத்துள்ளதாகவும் அதன்காரணமாக மனைவி மகேஸ்வரியுடன் அவ்வப்போது சிறு சிறு தகராறு ஏற்பட்டதாகவும், மயிலாடுதுறையில் நியூட்ரிசியன் வேலைக்கு சென்ற மகேஸ்வரி அடிக்கடி போன் செய்து ஒருசில நபர்களிடம் பேசி வருவதாகவும், அதனை பிடிக்காமல் கண்டித்ததாகவும் கூறிய ராஜ்குமார், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை செய்து தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் விரைவாக மீட்டுதர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக மணல்மேடு காவல்நிலையம் சார்பில் மூன்று பேரின் புகைப்படங்களையும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மகேஸ்வரியின் செல்போனில் தொடர்பிலிருந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை ஈடுப்பட்டு இவர்கள் காணாமல் போனதில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளும் மாயமாகியுள்ளதால்,விசாரணையை இன்னும் தீவிரப்படுத்த புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

