மயிலாடுதுறையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - விசாரணை குளறுபடி என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
மயிலாடுதுறையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் ஒருவரை கைது செய்து மேலும் 5 இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை, சிறுமி, பாலியல் வன்கொடுமை, இளைஞர், கைது , போக்சோ,மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் ஒருவரை கைது செய்து மேலும் 5 இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் என்பவரது 20 வயதான மகன் அபிநாத். இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு தனது தந்தையுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த அந்த சிறுமி, தன்னை அபிநாத் நவம்பர் 25-ம் தேதி கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளித்தார்.
5 இளைஞர்களிடம் விசாரணை
அந்த புகாரை தொடர்ந்து அதுகுறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தி, அவரது வாக்குமுலம் பதிவு செய்தனர். அதனை அடுத்து விசாரணையின் அடிப்படையில் அபிநாத் சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அபிநாத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் துன்புறுத்தலில் அபிநாத் ஈடுபட அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி. மறுப்பு
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், காவல்துறைக்கு கிடைத்த புகார் மனுக்களின் உண்மை தன்மை ஆராய்ந்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணை காலங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூட்டு பாலியல் தொல்லையா? என சந்தேகம்
இருந்தபோதிலும் இந்த வழக்கில் குளறுபடி உள்ளதாகவும், மேலும் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உடைந்ததையாக இருந்தாக கைது செய்து விசாரணை செய்துவரும் 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து குற்றவாளிகள் யாரும் தப்பிக்காத வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்தி காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை கேட்டு மனு
மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஷங்கமித்திரன் என்பவர் இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும் பாலியல் குற்றச் சம்பவத்தை மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். ஆகையால் தாங்கள் தலையிட்டு உரிய விசாரணை செய்து உரிய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கினை உள்ளூர் காவல் அதிகாரிகள் விசாரணை செய்யாமல், நேர்மையான அதிகாரி தலைமையில் சிபிசிஐடிக்கு மாற்றிட ஆவணம் செய்ய வேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.