சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு : மத்திய துணை ராணுவப்படையை சேர்ந்தவரிடம் விசாரணை
சீர்காழியில் சமையல் கலைஞர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவப்படையை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் என்பவரின் மகன் 27 வயதான கனிவண்ணன். இவர் கேட்டரிங் படித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் மீண்டும் ஊர் திரும்பி சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 -ஆம் தேதி இரவு சட்டநாதபுரம் உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் நெற்றி பொட்டில் துளை போட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தனது இருசக்கர வாகனதுடன் இறந்து கிடந்துள்ளார். இவர் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர், கனிவண்ணனின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கனிவண்ணன் தூப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தடயங்கள் தென்பட, கனிவண்ணன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொள்ளப்பட்டதை உறுதிபடுத்தினர். மேலும், தடய அறிவியல் சோதனைக்காக கனிவண்ணின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை எஸ்.பி. ஜவகர் மேற்பார்வையில், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 11 உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகளை அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடய அறிவியல் பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்த நிலையில், கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் குடும்பத்தினர் தெரிவித்ததால் கனிவண்ணன் உடல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Watch: கோலி.. கோலி.. கோஷமிட்டு வம்பிழுத்த ரசிகர்கள்.. ரசிகர்களை முறைத்த கம்பீர்.. வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கனிவண்ணனின் செல்போனுக்கு வந்த கால் நம்பர்களை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். இதில் மத்திய துணை ராணுவ படையைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியது தெரியவந்தது. இதனை அடுத்து, அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள நபரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், 3 காலி தோட்டாக்கள், ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். இருப்பினும் தீவிர விசாரணை முடிந்த பிறகு தான் கொலைக்கான காரணங்கள் குறித்த, உண்மை தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இளைஞர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவ வீரரை காவல்துறையினர் விசாரணை செய்துவரும் சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
Gold, Silver Price Today : 3 நாட்களில், சவரனுக்கு ரூ.1280.. ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..