Watch: கோலி.. கோலி.. கோஷமிட்டு வம்பிழுத்த ரசிகர்கள்.. ரசிகர்களை முறைத்த கம்பீர்.. வைரலாகும் வீடியோ!
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், கம்பீர் உடை மாற்றும் அறைக்குள் நுழையவிருந்தபோது, 'கோலி, கோலி' என்று ரசிகர்கள் கோஷமிடுவதைக் காட்டுகிறது.
கௌதம் கம்பீர் vs விராட் கோலி சண்டை நடந்து நான்கு நாட்கள் ஆகியும், அந்த சம்பவம் இன்னும் முடிந்தபாடில்லை. இந்திய கிரிக்கெட்டின் இரண்டு மிகப்பெரிய வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் குறித்து பல மூத்த வீரர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமின்றி BCCI இருவருக்குமே 100 சதவீதம் போட்டிக்கான சம்பளத்தை அபராதமாக அறிவித்தது. சில மூத்த வீரர்கள் தண்டனை கடுமையாக இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை பொருட்படுத்தாத, கோலி vs கம்பீர் சண்டை, ஐபிஎல்லின் வரலாற்றில் கரும்புள்ளியாக இடம்பிடித்தது. மிட்செல் ஸ்டார்க் vs கீரன் பொல்லார்ட் சம்பவம், ஹர்பஜன் சிங். எஸ் ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் என சில சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலி வெர்சஸ் கம்பீர்
கோலி வெர்சஸ் கம்பீர் 2.0 சண்டை இதில் இன்னும் முடியாமல் இருப்பதற்கு, ரசிகர்களின் ஆதரவுதான் காரணம். முன்னர் நடந்த சண்டைகளை எல்லாம் விமர்சித்த ரசிகர்கள் இந்த சண்டையில் கோலியின் பக்கம் நிற்கின்றனர். ஏனென்றால் நடந்த சம்பவம் அப்படி. கம்பீர் ரசிகர்களிடம்தான் முதலில் வம்புக்கு சென்றார். அதற்கு பதிலடி தந்து, வெற்றியையும் பெற்றது ரசிகர்களுக்கு விராட் கோலி தங்களுக்காக நிற்பதுபோன்ற பிம்பத்தை தர, சம்பவம் பலரால் ரசிக்கவும் பட்டது. இதனிடையே அடுத்த போட்டியிலும் கம்பீரை விட்டு வைக்காத கோலி ரசிகர்கள் அவரை மீண்டும் வெறுப்பேற்றியுள்ளனர்.
கம்பீரை வம்பிழுத்த ரசிகர்கள்
கடந்த புதனன்று, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் ஐபிஎல் 2023 போட்டியின் போது, மழை பெய்து கொண்டிருந்தபோது கூட்டத்தின் ஒரு பகுதி எல்எஸ்ஜி பயிற்சியாளர் கம்பீர நடந்து உள்ளே சென்றுகொண்டிருந்தபோது அவரை ரசிகர்கள் வம்பிழுத்தனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், கம்பீர் உடை மாற்றும் அறைக்குள் நுழையவிருந்தபோது, 'கோலி, கோலி' என்று ரசிகர்கள் கோஷமிடுவதைக் காட்டுகிறது. பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் சிக்கிக் கொள்ளாத கம்பீர், படிக்கட்டுகளில் நின்று, உள்ளே போகும் முன் கூட்டத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்து முறைத்தார்.
This is brutal ragging from the crowd. 😂 #LSGvsCSK #ViratKohli #GautamGambhir pic.twitter.com/q13QRBdKDS
— ESCN 18 🤙 (@EddyTweetzBro) May 4, 2023
முடிவற்று முடிந்த போட்டி
கோலி vs கம்பீர் சண்டை நடந்ததற்கு பின், நேற்று முதல் முறையாக LSG அடுத்த போட்டிக்கு வந்தது. எகானா ஸ்டேடியத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், MS தோனி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பிறகு, எல்எஸ்ஜி 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் 125/7 ரன்களை எட்டியது. அப்போது மழை வந்ததால் ஆட்டம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மழை ஓய மறுத்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆயுஷ் படோனி ஒரு அற்புதமான அரை சதத்துடன் அணிக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில், பெரிய ரன் இல்லை என்பதால் சென்னை அணி பேட்டிங்கிற்கு இறங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால் ஆட்டம் முடிவில்லாமல் போனது அனைவரையும் எமற்றமடைய செய்தது.