9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கு நன்கு அறிந்த நெருக்கமான நபர்களால் தான் பதிப்பை சந்திக்கின்றனர். அதுவும் மாதா, பிதா, குரு என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் 27 வயதான சோனி என்கிற சுரேஷ்மேனன். இவர் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி 4-ஆம் வகுப்பு படித்துவந்த 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு
அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் -2012 (POCSO) போக்சோ வழக்கு பதிவு செய்து சுரேஷ்மேனனை கைது செய்தனர். தொடரும் அவரிடம் விசாரணை நடத்திய அப்போதைய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி குற்றப்பத்திரிக்கையை தக்க செய்தார்.
கடுங்காவல் தண்டனை விதிப்பு
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டு, நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், சுரேஷ்மேனனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதனை அடுத்து குற்றவாளி சோனி என்கிற சுரேஷ்மேளனை திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் கொண்டு அடைத்தனர்.
பாராட்டு தெரிவித்து எஸ்.பி
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் இராம.சேயோன் ஆஜராகி வாதாடிய நிலையில், வழக்கின் தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் இராம.சேயோன், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த தலைமை காவலர் வேலன்டினா ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வெகுவாக பாராட்டு தெரிவித்தார்.
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
போக்சோ நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பு
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் கடைசி 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்சோ நீதிமன்றம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து போக்சோ வழக்கில் முதல் தீர்ப்பு நீதிபதி ராஜகுமாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.