காரில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டர் பாண்டி சாராயம் காருடன் பறிமுதல் - 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் மது கடத்தல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள், மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.
3ஆவது பிரதமராகும் மோடி.. குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
தடுக்க திண்டாடும் காவல்துறை
இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மாநில மது விற்பனை என்பது தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவல்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
மதுவிலக்கு குற்றங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா அண்மையில் உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து, செம்பனார் கோவில் காவல் சரகம் பகுதியில் காரில் சாராயம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் காவல்துறையினர், செம்பனார்கோவில் காவல் எல்லைக்கு உள்பட்ட காளஹஸ்திநாதபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட சாராயம்
அப்போது, அதிவேகமாக வந்த TN 09 AT 9163 என்ற பதிவெண் கொண்ட Cheverlot சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அப்போது காரில் 900 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, பாண்டி சாராயத்தை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த ஆயப்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் 30 வயதான மகன் சுமன், திருக்களாச் சேரியை சேர்ந்த செந்தில் என்நவரின் மகன் 24 வயதான முருகேசன் ஆகியோரை பிடித்து மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரி வுக்கு கொண்டு வந்து வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் தொடர்புடைய மணக்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் 48 வயதான மகன் செல்வம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.