”பேய் பிடித்ததால் மனைவி தினமும் அடிக்கிறார்..” : பெண்ணின் கணவர் செய்த வெறிச்செயல்...!
இப்படி அடிக்கடி தனது மனைவி அடித்து வருவதால், அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கணவர் எண்ணியுள்ளார்.
மனைவி பேய் பிடித்ததால் தன்னை அடிப்பதாக நினைத்து, மனைவியை கணவன் கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியைச் சேர்ந்தவர் இர்பான் ஷேக். இவரது மனைவி குரேஷா ஷேக். கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த சண்டையில் இர்பானை, அவரது மனைவி அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இப்படி அடிக்கடி தனது மனைவி அடித்து வருவதால், அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கணவர் எண்ணியுள்ளார். யாரோ ஒருவரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்தியால் குரேஷா தன்னைத் துன்புறுத்துவதாக இர்பான் மூட நம்பிக்கை மீது நம்பியுள்ளார். மேலும் படிக்க: ஆட்டோவில் ஒலித்த பக்தி பாடல்.. பட்டப்பகலில் திகில்.. கீழே குதித்து உயிர்தப்பிய பெண்..
இந்த நிலையில், நேற்று கணவர் இர்பான் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், கடுப்பான மனைவி கணவரை அடித்து துவைத்திருக்கிறார். தன் மீது புகுந்துள்ள பேய் தான் தன்னை அடிப்பதாகவும், அது உள்ளிருப்பதால்தான், மனைவி தன்னை தாக்குவதாகும் என்று நம்பிய கணவர், கத்தியால் குத்தி பேயை விரட்டுவதாக என்று எண்ணி மனைவியை சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால், வலியால் அவர் அலறி துடித்துள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, மனைவியை குத்திய பயத்தில் எஸ்கேப் ஆன கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் படிக்க: கள்ளக்காதல் விவகாரம் - மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் போலீசில் சரண்
குற்றம் சாட்டப்பட்ட இர்பான் ஷேக் தனது மனைவி குரேஷா ஷேக்கை டிசம்பர் 21 ஆம் தேதி அதிகாலை மது போதையில் தாக்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாரோ ஒருவரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்தியால் குரேஷா தன்னைத் துன்புறுத்துவதாக இர்பான் குற்றம் சாட்டியாதாகவும், தப்பி ஓடிய இர்பான் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குரேஷா தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரி கூறினார்.
மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளை படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்