மேலும் அறிய
Advertisement
மதுரை அருகே கடன் தொல்லையால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - 3 பேர் பலியான சோகம்
விவசாயி முருகன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது மனைவி, மகன், மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி விட்டு , விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெரிய இலந்தை குலத்தைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி ஊமச்சிகுளம் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் கொய்யாத்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். கொய்யா தோப்பில் போதிய காய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடன் சூழலில் வாழ்ந்து வரும் முருகனுக்கு இதுவும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. இந்நிலையில் பெரும் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது . இதனால் மன உளைச்சலில் காணப்பட்டு வந்த முருகன் தனது மனைவி சுரைகா ( 35 ) , மகள் யோகிதா ( 16 ) , மகன் மோகனன் ( 11 ) ஆகிய மூன்று பேரை கொய்யா தோப்பில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு உள்ளார். அதன் பின்னர் முருகனும் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தாங்கள் குடும்பத்துடன் கடவுளிடம் செல்வதாக நண்பருக்கு தொலைபேசியில் முருகன் கூறியதால் அவரது நண்பர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டு உள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான முறையில் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டிருந்த முருகனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயி முருகன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது மனைவி, மகன், மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion