Crime: உசிலம்பட்டியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது
உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை பகுதிகளில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களை திருடிய நபர் என்பதும் தெரியவந்தது.
உசிலம்பட்டியில் அடுத்தடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுக்கி வைத்திருந்த சுமார் 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் பேரையூர், எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை, திருடப்பட்ட இடங்களின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வத்தலக்குண்டு ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது டி.வி.எஸ்., எக்ஸ்.எல் என்ற இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த இளைஞரை இடைமறித்து சோதனை நடத்திய போது அவர் திருட்டு இருசக்கர வாகனத்தை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது.
து.பாறைப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற அந்த இளைஞரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை பகுதிகளில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களை திருடிய நபர் என்பது தெரியவந்தது. மேலும் காளீஸ்வரனை கைது செய்த போலீசார், அவர் இயக்கி வந்த இருசக்கர வாகனம் உள்பட பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Letter: மிக்ஜாம் புயல் பாதிப்பு: கடன் தவணையை நீட்டிச்சு அறிவிங்க.. நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMDK Meeting: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்..