புதுக்கோட்டை: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை..! குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள ஏம்பல் கிராமத்தில் 7 வயதான சிறுமி வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென குழந்தையைக் காணாமல் போனதால் பெற்றோர்கள் சிறுமியைத் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டு எடுக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி ஆனது.
The Madurai bench of the Madras high court confirmed the death sentence awarded by a trial court to a 26-year-old man for raping and murdering a seven-year-old girl.https://t.co/17Gv2f5hso
— Hindustan Times (@htTweets) January 13, 2022
இந்த நிலையில் குற்றவாளியை கண்டு பிடித்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சாமி வேல் (26) என்கிற ராஜாவை கைது செய்து விசாரணை செய்தபோது, அவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு வெளியானது. குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதி மன்றம். அத்துடன் 6 மாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சாமி வேலுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸ் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் வைத்திய நாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்டு, தீர்ப்பை உறுதி செய்தனர் நீதிபதிகள். இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்திருக்கிறது.