கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை - போலீஸ் தீவிர சோதனை
கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 57 மதுபாட்டில்கள் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும், தீவிர சோதனையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர், குளித்தலை, தொகை மலை, வெள்ளியணை, பாலவிடுதி மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக எட்டு பேர் மீது வழக்குப்பதிவு அவர்களிடமிருந்து 57 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பருமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மில்லிலிட்டரின் அளவு 10,260 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
.
கரூர் மாவட்டம் முழுவதும் மூன்று கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கரூர் மாவட்டம் முழுவதும் புகையிலை விற்பனை செய்ததாக ஒன்பது பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய போலீசார்களால் புகையிலை விற்பனை செய்யப்படும் நிகழ்வு குறித்து கண்காணித்து, வழக்குப்பதிவு ஏற்பட்டு புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வருகிறது. அந்த வகையில் கரூர், வெங்கமேடு, தாந்தோணி மலையில் தோகைமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் மாயம் போலீசில் புகார்
கடவூர் தாலுக்கா சுண்டு குளிப்பாட்டியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சங்கீதா திடீரென்று மாயமான பல இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை. இது குறித்து அவர் உறவினர் முருகேசன் அளித்த புகாரின் சிந்தாமணி பட்டியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
கார் மீது வேன் மோதல் மூன்று பேர் படுகாயம்.
கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கீழ முனையுறை சேர்ந்தவர் நம்பிராஜன். சம்பவத்தன்று இவர் தனது தாய் இளஞ்சியம் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் கார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த பால்வேன் கார் மீது மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். உடன் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வேன் டிரைவர், புலியூர் குளத்துப்பாளையம், சீனிவாசன் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.