மேலும் அறிய
மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி: பிறந்ததும் உயிரிழந்த பச்சிளங்குழந்தை..கோடம்பாக்க அதிர்ச்சி!
சென்னை, கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியான ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தில், அவருக்கு பிரசவம் ஏற்பட்டு பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தற்கொலை முயற்சி
சென்னை, கோடம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வந்தார். அந்த மாணவி கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில், திடீரென அந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவர் மேலே இருந்து குதித்தில் மாணவிக்கு திடீரென பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், மாணவி மேலே இருந்து குதித்த வேகத்தில் பச்சிளங்குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து மாணவியை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















