குளித்தலை அருகே வழுக்கு மரத்தை ஆற்றில் எடுத்து சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
’’மரம் தண்ணீரில் மூழ்கிய போது கையில் பிடித்திருந்த பிரேமனந்தன் கையித்துடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார்’’
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் அரசனை தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ இவருடைய மகன் பிரேமனந்தன் (26) இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபா (23) என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் விழாவையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி காவிரி கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் கற்பூர மரத்தை இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த மரம் பெரிதாக இருந்ததால் அதனை காவிரி ஆற்றுத் தண்ணீரில் போட்டு தங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதன்படி நேற்று அதிகாலை பிரேமனந்தன் உள்ளிட்ட இளைஞர்கள் அந்த அந்த மரத்தை காவிரி ஆற்று நீரில் போட்டு தண்ணீரில் நீந்தியபடி மருதூர் ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர். மரத்தில் கயிற்றால் கட்டி அதன் மற்றொரு பகுதியை பிரமானந்தா பிடித்து இருந்ததாக கூறப்படுகிறது இவர்கள் தண்ணீரில் நீந்தி வந்த போது அப்பகுதியில் உள்ள ஆழமான இடத்தில் சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரேமனந்தன் தவிர அவருடன் வந்த இளைஞர்கள் தண்ணீரில் நீந்தி தப்பியுள்ளனர். ஆனால், மரம் தண்ணீரில் மூழ்கிய போது கையில் பிடித்திருந்த பிரேமனந்தன் கையித்துடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. பின்னரே பிரேமனந்தன் தண்ணீரில் மூழ்கிய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிரேமனந்தன் உடல் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழுக்கு மரம் ஏறும் போட்டி மரத்தை வெட்டி ஆற்றில் கொண்டு வரும் போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.