கரூரில் ஆம்னி வேனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ரகசிய தகவல் கிடைத்த அடிப்படையில் சட்டவிரோதமாக மது, கள் விற்ற 10 பேரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, கள் விற்றதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, எஸ்.ஐ அழகுராம் வெள்ளியணை, குளித்தலை, தோகைமலை சட்டம்- ஒழுங்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ராமசாமி 65, பிரகாஷ் 40, கருப்பு சாமி 45, பிச்சைமுத்து 65, செல்வம் 45, காமராஜ் 42 மற்றொரு காமராஜ் 45, கள் விற்றதாக முருகன் 47, சுப்பிரமணியன் 60, சந்திரசேகர் 42 ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 43 மது பாட்டில்கள் மற்றும் 19 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூரில் ஆம்னி வேனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி.
கரூர் வெங்கமேடு பகுதியில் மோட்டார் அறை மற்றும் ஆம்னி வேனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் நேற்று வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், வெங்கமேடு பசுபதி தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் அறை மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் ஆகியவற்றை சோதனை செய்தபோது, ஆம்னி வேனில் 500 கிலோ மற்றும் மோட்டார் அறையில் 2.30 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் இந்த பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.