மேலும் அறிய
Advertisement
Ttf Vasan: டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் செக்.. திருக்குறளை முன் உதாரணமாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி...!
அரசு தரப்பு வழக்கரறிஞராக ஆஜராகிய கார்த்திகேயன், சுமார் 40 லட்சம் பாலோவர்ஸ்கள் டி.டி. எஃப் வாசனுக்கு இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருசக்கர வாகனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது, உயர்ரக பைக்குகளில் சாகசங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎஃப் வாசனின் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசன் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை விடியற்காலை டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாசன் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறைக்கு சென்ற வாசன் உடல்நிலை சரியில்லாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ஒன்றில் , டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜாமீன் மனுவை நீதிபதி இனியா கருணாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை டி.டி.எப் வாசன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வெங்கட்ராமன் ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வாசனுக்கு கைகள் உடைந்து இன்னும் அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தால் வாகனத்தை தொட மாட்டார். ஏற்கனவே நாங்கள் லைசன்ஸ் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். அவருக்கு தமிழ்நாடு முழுவதும் நிறைய பாலோவர்ஸ் இருக்கிறார்கள் அவர் இனி இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் கூட ஒரு டிரைவர் வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். நூதன தண்டனை ஏதாவது கொடுத்தால் கூட நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என வாதத்தை முன் வைத்தார்.
அரசு தரப்பு வழக்கரறிஞராக ஆஜராகிய கார்த்திகேயன், சுமார் 40 லட்சம் பாலோவர்ஸ்கள் டி.டி. எஃப் வாசனுக்கு இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது இடத்தில் கூட பிறரை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குகிறார். இவருக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன் உதாரணமாக அமையும். யார் வேண்டுமென்றாலும் வாகனத்தை, எப்படி வேண்டுமானாலும், இயக்கிவிட்டு ஜாமீனில் வெளி வந்துவிடலாம் என கமெண்ட் செய்வார்கள் என தனது வாதத்தை முன் வைத்தார்.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விபத்துக்குள்ளான வாகனம் குறித்து கேட்டறிந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனமா அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனமா என கேட்டார். இதனை அடுத்து போக்குவரத்து புலனாய்வு செய்யப்பட்டுள்ளதாக கேள்வியை எழுப்பிய அவர், உடனடியாக போக்குவரத்து புலனாய்வு பணியை முடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் , ' அஞ்சுவது அஞ்சாமை பேதமை ' என்ற திருகுறளுக்கு இணங்க சாகசம் செய்பவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்யக்கூடாது. அப்படி செய்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் அவர் பயன்படுத்திய வெளிநாட்டு பொருட்கள் அனுமதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion