மேலும் அறிய
Advertisement
இரிடியம் மோசடி - ராம்பாபு மீது 12 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இரிடியத்தில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் பெறலாம் என கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ராம்பிரபு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரபு (எ) ராஜேந்திரன். இவர் இரிடியத்தில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் பெறலாம் எனக்கூறி பலரிடம் பணம் வசூலித்துள்ளார். பலரிடமும் பணம் வசூலித்து பல கோடிக்கு மோசடி நடந்துள்ளது. இது குறித்து பலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இந்த மோசடியில் தொடர்புடைய ராம்பிரபுவை கைது செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராம்பிரபு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் தான் எந்த முடிவுக்கும் வர முடியும். இப்போதுள்ள நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டியதில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. போலீசார் வழக்கின் விசாரணையை 12 வாரத்தில் முடித்து, விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
கொடைக்கானல் திரு இருதயக் கல்லூரியில் உதவி சட்டப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
மதுரையில் லாஸ் சட்ட செயலாக்க பணியகம் இயங்கி வருகிறது,இங்கு ஆண்டுதோறும் உதவி சட்டப்பணியாளர் பயிற்சியினை நடத்தி சான்றிதழ் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் 5 குழுக்குகளுக்கு 6 கட்டமாக சட்டப்பயிற்சி அளிக்கப்பட்டது, இதனையடுத்து இந்த பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள திரு இருதய கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது, இதில் கொடைக்கானல் நீதிமன்ற நீதிபதிகள் குற்றவியல் நீதிதுறை நடுவர் கார்த்திக் ML., மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதிதுறை நடுவர் தினேஷ்குமார்B.A.B.L... தலைமை வகித்து சான்றிதழை வழங்கினர். உதவி சட்டப்பணியாளர்கள் மதுரை,திண்டுக்கல், மயிலாடுதுறை, திருப்பூர்,ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டு கடந்த இரண்டு நாட்களாக திறனாய்வு பயிற்சி அளித்தனர், இந்த பயிற்சிகளை உயர்நீதி மன்ற வழகறிஞர்கள் சந்தனம், பிலோமின்ராஜ்,சவரிராஜ் ஒருங்கிணைப்பு செய்தனர், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உதவி சட்டப்பணியாளர்கள் ஒரு அமைப்பாக செயல்படவும், மனித உரிமையை காக்கவும்,ஏழைகள்,பெண்கள்,சிறா ருக்கு சட்ட உதவி வழங்கவும் என்றும் தமழகத்தல் அதிகபடியான சட்டப்பணியாளர்களை உருவாக்கவும் எனவும் உறுதியளித்தனர், இவ்விழாவில் திரு இருதயக்கல்லூரி தலைவர் பேட்ரிக் ரவிச்சந்திரன், பொருளாளர் ஜோசப் ஆண்டனிசாமி, வழக்கறிஞர் செல்லத்துரை, ராஜா உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion