Crime: நண்பனின் ஆசனவாயில் டம்ப்ளரை நுழைத்து தாக்கிய கொடூரம்.. மதுபோதையால் பயங்கரம்..
நண்பர்கள் சேர்ந்து ஒருவரின் ஆசன்வாய்க்குள் ஸ்டீள் டம்ப்ளரை திணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்கள் இடையே சில நேரங்களில் தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்று. அப்படி தகராறு நடைபெறும் போது ஒரு சில நேரங்களில் பெரியளவில் பிரச்னையாக மாறிவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நண்பர்கள் சிலர் சக நண்பரின் ஆசனவாய் பகுதி வழியாக ஒரு ஸ்டீல் டம்பளரை உள்ளே அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் குருஷ்னா ராவோத்(45). இவர் குஜராத் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் குஜராத்தில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது இவர் அதிகமாக மது அருந்தியுள்ளார். அந்த சமயத்தில் இவருடன் மது அருந்திய சக நண்பர்கள் ஒரு விஷயத்தை செய்துள்ளதாக தெரிகிறது. அதாவது அவர்கள் அனைவரும் சேர்ந்து கிருசுனா ராவோத் உடம்பின் ஆசனவாய் பகுதி வழியாக ஒரு ஸ்டீல் டம்பளரை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க:பாலியல் தொல்லை....தீ வைத்து கொல்ல முயன்ற சிறுவன்... சிகிச்சையில் இருந்த சிறுமி பலி
இதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் குருஷ்னா ராவோத் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. எனினும் குருஷ்னா தன்னுடைய நண்பர்கள் செய்த விஷயத்தை மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் அவர் தன்னுடைய சொந்த ஊரான ஒடிசாவிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு வலி அதிகமானதுடன் அவருடைய வயிறு வீங்கியுள்ளது.
ஒடிசாவிற்கு சென்ற குருஷ்னாவை அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பெஹ்ராம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவருடைய வயிற்றுக்குள் ஒரு டம்ப்ளர் இருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அந்த அறுவை சிகிச்சை மூலம் அவருடைய வயிற்றிலிருந்து டம்ப்ளர் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் அவருடைய ரெக்டம் வழியாக அந்த டம்ப்ளரை எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதை எடுக்க முடியவில்லை என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்சத்துக்கு சென்ற மது போதை: சக நண்பர்கள் தாக்கியதில் கூலி தொழிலாளி பலி:
மயிலாடுதுறை மாவட்டம் கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் 35 வயதான புனிதன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார். அப்போது ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறத் தொடங்கியுள்ளது.
பின்னர் மது போதையில் இருந்த புனிதனின் நண்பர்கள் தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர். குடி போதையில் நண்பர்கள் சேர்ந்து சக நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் படிக்க:நைட் க்ளப் ஃப்ரன்ஷிப்! தொழிலதிபரை கடத்த ஸ்கெட்ச் போட்ட பெண் டாக்டர்! சிக்கிய ஒப்பந்தக்காரர்!