Gelatin Sticks: 40 பெட்டிகளில் 8000 ஜெலட்டின் குச்சிகள்... கைப்பற்றிய காவல் துறை... கேரளாவில் அதிர்ச்சி
வெடிபொருள்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த அப்பகுதி மக்கள், திறந்தவெளிப் பகுதிகளிலும், தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலும் இந்த வெடிபொருட்களைக் கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
பாலக்காடு அருகே உள்ள குவாரி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 பெட்டிகளில் 8000 ஜெலட்டின் குச்சிகள்
பாலக்காடு அருகே உள்ள ஓங்கலூரில் 40 பெட்டிகளில் 8000 ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜெலட்டின் குச்சிகள் எவ்வாறு இப்பகுதிக்கு வந்தது, அவற்றை அங்கு கொண்டு சென்றது யார் என்பது குறித்து தெரியாத நிலையில், வெடிபொருட்களைக் கைப்பற்றிய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kerala | Around 8000 gelatin sticks in 40 boxes found abandoned near a quarry in Shornur, Palakkad district, say police. Further investigation underway pic.twitter.com/xg7kxZqu4J
— ANI (@ANI) August 4, 2022
முன்னதாக வெடிபொருள்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த அப்பகுதி மக்கள், திறந்தவெளிப் பகுதிகளிலும், தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலும் இந்த வெடிபொருட்களைக் கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினர் ஓங்கலூர் பகுதியில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8,000 #Gelatin Sticks Recovered Near A #Quarry In Kerala's #Palakkad#Explosiveshttps://t.co/gMT1dFzG8p
— ABP LIVE (@abplive) August 4, 2022
இதற்கு முன் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலக்காடு வாளையாற்றில் இருந்து ஒரு மினி லாரியில் இருந்து 7,500 டெட்டனேட்டர்கள் மற்றும் 7,000 ஜெலட்டின் குச்சிகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் இருந்து எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலிக்கு கொண்டு செல்லப்பட்ட தக்காளி அட்டைப்பெட்டிகளுடன் அந்த வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டறியப்பட்டு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டன.
அதேபோல் செப்டம்பர் 2020ஆம் ஆண்டு, எர்ணாகுளத்தின் காலடியில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குவாரிக்கு அருகில் உள்ள கட்டடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் உயிரிழந்தனர். சுரங்கத்திற்காக பாறைகளை வெடிக்கச் செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெலட்டின் குச்சிகள் என்றால் என்ன?
ஜெலட்டின் குச்சிகள் என்பவை ஜெல்லி போன்ற சிறுசிறு குச்சிகளால் ஆன வெடிபொருள் ஆகும். இவை குவாரியில் பாறைகளையும், பெரும் கட்டடங்களையும் இடிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்