மேலும் அறிய

தங்கநகை கேட்டு தகராறு செய்த கணவன்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் ஆன நான்கே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கநகை கேட்டு தகராறு செய்த கணவன்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த  திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ்( 32). இவர் திருக்காடுதுறை நீரேற்று பாசன  நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் . இவரது மனைவி காயத்ரி(24). இவர் திருக்காடுதுறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மிதுன் (3) என்ற குழந்தை  உள்ளது. இந்நிலையில் பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தனது மனைவியின் பெற்றோர்களிடம் தங்க நகை  வாங்கி வருமாறு அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். அதன் பெயரில் காயத்ரி தனது பெற்றோர்களிடம்  சென்று தங்க நகை கேட்டு வந்துள்ளார். அதன் காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு முன் 4 1/2 பவுன் தங்க செயின் கொடுத்துள்ளனர். மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் விரக்தியில் இருந்துள்ளார். 

தங்கநகை கேட்டு தகராறு செய்த கணவன்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

 பூபேஸ் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து காயத்ரி வீட்டில்  மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபேஸ் வெளியில் சென்று விட்டு வந்து கதவை திறந்து பார்த்தபோது காயத்ரி சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயத்ரியை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த சம்பவம் குறித்து காயத்திரியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காயத்ரியின் தாய் இளையம்மாள் காயத்ரியின் சகோதரர் சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். இது குறித்து சசிகுமார் தனது சகோதரி காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து  விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  காயத்ரி  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

தங்கநகை கேட்டு தகராறு செய்த கணவன்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

இந்நிலையில்  திருமணம் நடந்து நான்கு ஆண்டுகளே ஆனதால் காயத்ரி வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கரூர் கோட்டாட்சியர் ரூபினா தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காயத்ரியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பூபேஷை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

டெலிகிராமில் எங்களை தொடர்புகொள்ள: https://t.me/abpdesamofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
Embed widget