watch video | உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலையா? - தலைமறைவான பெற்றோர்களால் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் தலைமறைவால் நீடிக்கும் மர்மம் , பெண் சிசு கொலையா என காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை உசிலம்பட்டி அடுத்த பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ”கௌசல்யா - முத்துப்பாண்டி” தம்பதியர். இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே நான்கு மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
#Abpnadu #usilampatti #crime
— Arunchinna (@iamarunchinna) December 28, 2021
உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் தலைமறைவால் நீடிக்கும் மர்மம் - பெண் சிசு கொலையா என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிசிக்கொலை ஏற்பட்டுள்ளதாக வேதனை. pic.twitter.com/FqdWhouWyi