Palani: காலை உணவு திட்டம் கீழ் பணியாற்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை - பாஜக நிர்வாகி மீது புகார்
சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக மாவட்ட செயலாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார்.
பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க மாவட்ட செயலாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக கலை செல்வி (38) என்ற பெண் பணியாற்றி வந்தார்.
Breaking News LIVE: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தேர்தல் பரப்புரை
இவர் காலை வழக்கம் போல் சமையல் செய்வதற்காக பள்ளிகூடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரான பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரன் என்பவர் சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டி கொண்டிருக்கும் போது அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த கலைச்செல்வி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
BJP Worker: நொடி நேர தவறு - மத்திய அமைச்சர் கார் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! பரப்புரையில் சோகம்
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகுடிஸ்வரன் மீது மானபங்கம் செய்தல். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே அரசு காலை உணவு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் , பாஜக மாவட்ட செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான பாஜக மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.