Breaking News LIVE: ஜவஹர்லால் நேரு பை-பை சொன்னதை அசாம் மக்கள் மறக்க மாட்டார்கள் : லக்கிம்பூரில் அமித்ஷா பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்களுக்காக ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
கேரளாவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.டி., சாலை வழியாக பனகல் பார்க் செல்கிறார். அங்கு தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் மோடி 6 மணியளவில் ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னையில் போட்டியிடும் பால்கனகராஜ் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோஜ் செல்வம் ஆகியோருகாக வாக்கு சேகரிக்க உள்ளார். ரோட் ஷோவுடன் இன்றைய பரப்புர முடிய, இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒய்வெடுக்கிறார். நாளை காலை சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
செளமியா அன்புமணி பிரச்சாரம்
மொரப்பூரில், முள்ளங்கி அறுவடை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭 pic.twitter.com/C5t0yJuD2n
— Sowmiya Anbumani (@Sowmiyanbumani) April 9, 2024
மதுபானக் கொள்கை வழக்கு.. இன்று நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது. கெஜ்ரிவால் ஊழல் செய்துள்ளார் - வழக்கறிஞர் எஸ் வி ராஜு
#WATCH | On Delhi CM Arvind Kejriwal's plea challenging his arrest by ED dismissed by Delhi High Court, ASG SV Raju, representing the Enforcement Directorate in the Delhi liquor policy case says, "Today the judge gave the judgement after seeing all the evidence and the court also… pic.twitter.com/vA608tfEpb
— ANI (@ANI) April 9, 2024
முதலமைச்சர் என்பதால் தனிச்சலுகை அளிக்கை முடியாது - டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி
"டெல்லி மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார்; கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரியவருகிறது; காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது; எப்படி விசாரிப்பது என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது; முதலமைச்சர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது" - டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி
ஜவஹர்லால் நேரு பை-பை சொன்னதை அசாம் மக்கள் மறக்க மாட்டார்கள் : லக்கிம்பூரில் பேரிய அமித்ஷா
#WATCH | Lakhimpur, Assam: Union Home Minister Amit Shah says, "...People of Assam will never forget how Jawaharlal Nehru said 'bye-bye' to Assam during the Chinese aggression. Under PM Modi's govt, China couldn't encroach even one inch of our land...Assam and Arunachal Pradesh… pic.twitter.com/Vb4IcMH4Cp
— ANI (@ANI) April 9, 2024
Breaking News LIVE: நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படையினர் சோதனை..!
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நயினார் நாகேந்திரனின் மேலாரிடம் சமீபத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.