மேலும் அறிய

BJP Worker: நொடி நேர தவறு - மத்திய அமைச்சர் கார் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! பரப்புரையில் சோகம்

BJP worker: மத்திய இணை அமைச்சரின் கார் மோதியதில் பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BJP worker: பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது.

கார் கதவால் விபத்து:

திங்கட்கிழமை பிற்பகலில் கே.ஆர்.புரம் பகுதியில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது காரின் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக தனது வாகனத்தின் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது பின்புறமாக ஒரு ஸ்கூட்டியில் வந்த பாஜக தொண்டர், காரின் கதவின் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அடுத்த நொடி அந்த வழியாக வந்த பேருந்து  அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பெயர் பிரகாஷ் மற்றும் வயது 63 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு:

IPC பிரிவு 304 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 283 (பொது வழியில் அல்லது வழிசெலுத்தல் வரிசையில் ஆபத்து அல்லது இடையூறு) ஆகியவற்றின் கீழ் கார்  மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஷோபா கரந்த்லாஜே போட்டியிடுகிறார். இதையடுத்து அப்பகுதியில் நடந்த பேரணியில் பரப்புரை செய்து கொண்டிருந்த போது  விபத்து நேர்ந்துள்ளது. ஆனால், அந்த நேரத்தில் அமைச்சர் அந்த காரில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விளக்கம்:

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா கரந்த்லாஜே, "எங்கள் தொண்டர் பிரகாஷ் விபத்தில் சிக்கினார். நான் பேரணிக்கு முன்புறம் சென்றிருந்தேன். சாலையின் முடிவில் கார் நின்றது.  அப்போது அவர் வந்து கார் மீது மோதி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மீது பேருந்து மோதியது. பிரகாஷின் பிரேதப் பரிசோதனை விரைவில் செய்யப்படுவதை உறுதி செய்ய காவல் துறை மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. நாங்கள் அவரது குடும்பத்தினருடன் இருக்கிறோம், அவர்களுக்குத் தேவையான இழப்பீட்டை வழங்கை நடவடிக்கை எடுப்போம்" என்று கரந்த்லாஜே தெரிவித்தார்.

ஷோபாவும் - சர்ச்சைகளும்:

கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பேசிய ஷோபா,தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை’’என்றார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தேர்தல் ஆணையமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget