மேலும் அறிய
Advertisement
Cuddalore Incident: பெட்ரோலை ஊற்றி எரிக்கப்பட்ட குடும்பம்; கடலூரில் நடந்தது என்ன..?
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை; இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
குடும்பப் பிரச்னையில் கணவன் பெட்ரோல் ஊற்றிக் கொண்டதில் வீட்டிலிருந்த 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் எரிந்தனர். இதில் 2 குழந்தைகள் உட்பட ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் - செல்வி தம்பதியருக்குத் தமிழரசி(30) மற்றும் தனலட்சுமி (27) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கள் மகள்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதில் தனலட்சுமிக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சற்குரு (32) என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 8 மாதம் குழந்தை உள்ளது. கடந்த ஓர் ஆண்டாகத் தனலட்சுமி மற்றும் சற்குரு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வசித்து வந்த தனது அக்கா தமிழரசி தங்கியிருந்த வீட்டில் தனலட்சுமி தனது குழந்தையுடன் இருந்துள்ளார். இதனிடையே இன்று காலை தனது மனைவி தனலட்சுமியைச் சந்திக்க சற்குரு வந்துள்ளார். அப்போது சற்குரு தனது கையில் பெட்ரோலுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இருவருக்கும் மேற்பட்ட வாக்குவாதத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றியதாகத் தெரிகிறது. தீ பற்றியதில் சற்குரு, தனலட்சுமி, அவரது எட்டு மாத கை குழந்தை, அக்கா தமிழரசி, மற்றும் அவரது 4 மாத கைக் குழந்தை, அவர்கள் தாய் செல்வி உட்பட 5 பேரும் தீயில் சிக்கியுள்ளனர்.இந்த சம்பவத்தில் தமிழரசி அவரது 4 மாத பெண் குழந்தை, தனலட்சுமி, 8 மாத ஆண் குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட தனலட்சுமி, சற்குரு மற்றும் தனலட்சுமி தாயார் செல்வி ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கடலூர் முதுநிலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் விசாரணை நடத்தினார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமி மற்றும் அவரது தாயார் செல்வியிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைமேற்கொண்டதில், "கணவன் சற்குரு மற்றும் மனைவி தனலட்சுமி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்துள்ளது. இதில் இருவரும் ஓர் ஆண்டாக பிரிந்து இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் தாயார் வீட்டில் வசித்து வந்த மனைவி தனலட்சுமியை சந்திக்க வந்த கணவர் அவர் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டதாக விசாரணையின்போது மனைவி தெரிவித்துள்ளார். மேலும், சற்குரு மனைவியை மிரட்ட அவர் அப்படிச் செய்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அவ்வாறு செய்தாரா? என்று தெரியவில்லை. இது முழுமையான விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion