மேலும் அறிய

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!

’’அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அதற்கு மத்தியில் அவரது படுக்கை இருந்தது இதனை பார்த்த காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்’’

கடலூர் மாவட்டம் ஆனைக்குப்பம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75) ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஆவார். இவருடைய மனைவி சரஸ்வதி, ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரி. இவர்களுக்கு ஆனந்தசெந்தில், கார்த்திக், கணேஷ் ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் கார்த்திக், கணேஷ் இரட்டை சகோதரர்கள். சுப்பிரமணியனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர்களது மகள் அமெரிக்காவிலும், ஆனந்தசெந்தில் பெங்களூருவிலும், கணேஷ் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
 
இந்நிலையில் மற்றொரு மகன் கார்த்திக் (32) மட்டும் தனது தந்தையுடன் மீனாட்சிநகரில் வசித்து வந்தனர். திருமணமாகாத கார்த்திக் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணியனுக்கும், கார்த்திக்குக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது தந்தை சுப்பிரமணியனை இரும்பு குழாயால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார் .இந்த நிலையில் சுப்பிரமணியன் கத்தும் சத்ததினை காலை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர், பின்னர் கார்த்திக் பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனை அருகே சென்று ஒரு ஆம்புலன்ஸ் ஒட்டுனரிடம் தனது தந்தை இறநதுவிட்டார் அவரை வைக்க ஒரு பிரீசர் பேட்டி வேண்டும் என்று கேட்டு ஓட்டுநரை அழைத்து சென்றுள்ளார் ஆனால் வீட்டில் கார்த்திக்கின் தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், புதுநகர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, துணை-ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 
வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
 
பின்னர் அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்பிரமணியன் உடலில், அவரது கை, கால், என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். அவரது அறையையும் காவல் துறையினர் சோதனை செய்த பொழுது அவரது அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அதற்கு மத்தியில் அவரது படுக்கை இருந்தது இதனை பார்த்த காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரது மன நிலை சீராக உள்ளதா எனவும் விசாரிக்க உள்ளனர், மேலும் வீட்டில் காலி சிகரெட் அட்டைகளும் குவியல், குவியலாக கிடந்தன. 

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கார்த்திக் மதுவுக்கு அடிமையானதும், தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தந்தை சுப்பிரமணியனிடம் தகராறு செய்து வந்ததும், இந்நிலையில் நேற்று குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், தந்தை என்றும் பாராமல் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையையே அடித்து கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
America Vs Venezuela: கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
America Vs Venezuela: கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
KV Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 வேலைவாய்ப்புகள்! ஆசிரியர் அல்லாத பணியிடமும் உண்டு- உடனே விண்ணப்பிங்க!
KV Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 வேலைவாய்ப்புகள்! ஆசிரியர் அல்லாத பணியிடமும் உண்டு- உடனே விண்ணப்பிங்க!
Vadivelu: 250 ரூபாய்க்காக குடைபிடித்த வடிவேலு! யாருக்கு தெரியுமா?
Vadivelu: 250 ரூபாய்க்காக குடைபிடித்த வடிவேலு! யாருக்கு தெரியுமா?
Rishabh Pant: “இதனால தான் தென்னாப்பிரிக்கா கிட்ட தோத்துட்டோம்“; ரிஷப் பண்ட் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
“இதனால தான் தென்னாப்பிரிக்கா கிட்ட தோத்துட்டோம்“; ரிஷப் பண்ட் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
Orange Alert: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.?
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளுத்து வாங்கப்போகுது கன மழை
Embed widget