Crime : பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை; காதலி மீது ஆத்திரத்தில் நபர் செய்த கொடூரம்..
மஞ்சுவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
![Crime : பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை; காதலி மீது ஆத்திரத்தில் நபர் செய்த கொடூரம்.. crime Tiruppatur boyfriend arrested after setting his girlfriend on fire - TNN Crime : பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை; காதலி மீது ஆத்திரத்தில் நபர் செய்த கொடூரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/09ae7c3e39fb2c3369855e29b6f62b1f1703070496998113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன் வயது (48). இவரின் மனைவி மஞ்சு, வயது (42). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கமலேசன், 2013-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் சிலநாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன் இறந்த ஓராண்டிலேயே அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்ற 51 வயது நபருடன், மஞ்சுவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் குப்பனுடன் மஞ்சு உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் இருவரும் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், மஞ்சுவுக்குத் திடீரென மற்றொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், குப்பனுக்கும் மஞ்சுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி உள்ளது. இதில் இரண்டாவது காதலன் இருப்பதைத் தெரிந்துகொண்ட குப்பன், அதுவரை செலவுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கொடு என்று கேட்டிருக்கிறார். இதனால், இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மஞ்சுவின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக்கொண்டும், பணத்தைத் திருப்பிக் கேட்டும் அடிக்கடி குப்பன் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், மஞ்சுவிடம் மீண்டும் நெருக்கமாக பழக முயன்றிருக்கிறார். இதனால் குப்பனை மீண்டும் நம்பாத மஞ்சு, குப்பனிடம் பேசுவதையும் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த குப்பன், நேற்றைய தினம் மஞ்சுவின் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் வந்துள்ளனர். வீட்டில் இருந்த மஞ்சு மீது அவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. பற்றிய தீ மளமளவெனப் வீடு முழுவதும் பரவி, மஞ்சுளா அலறி கூச்சலிட்டுள்ளார். மஞ்சுவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, மஞ்சுவை மீட்டிருக்கின்றனர்.
உடனடியாக மஞ்சுளா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீக்காயம் அதிகமிருந்ததால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மஞ்சுளா மாற்றப்பட்டார். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த கந்திலி காவல்துறையினர் , குப்பனைக் கைது செய்திருக்கின்றனர். அவருக்கும் கை மற்றும் உடம்பில் ஆங்காங்கே தீக்காயம் ஏற்பட்டிருப்பதால், சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம், திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)