மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலைமறியல்

அரிமளம் அருகே பைனான்ஸ் அதிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே, கல்லூர் ஊராட்சி தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாங்குடி (வயது 46). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு சகுந்தலா (38) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், வீட்டின் அருகே உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் தென்னந்தோப்பில் மஞ்சுவிரட்டு காளைகளை பராமரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அரிவாளால் மாங்குடியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் ரத்தம் கொட்டியபடி மாங்குடி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சில மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் மாங்குடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து மாங்குடியின் குடும்பத்தினருக்கும், கே.புதுப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாங்குடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


புதுக்கோட்டை மாவட்டத்தில் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலைமறியல்

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், 5 போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இந்நிலையில் பைனான்ஸ் அதிபர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாங்குடியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தினேஷ்குமார், அப்துல் ரகுமான் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலைமறியல்

கொலை செய்யப்பட்ட மாங்குடி மீது கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் நிலையத்திலும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் மாங்குடி கோவை உள்ளிட்ட ஊர்களில் பல்வேறு தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாங்குடியை கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாங்குடியின் செல்போன் கைப்பற்றப்படடு அவரிடம் யார்? யார்? பேசினார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget