மேலும் அறிய

PUBG Madan's Bail Plea: ஜாமின் கேட்ட பப்ஜி மதன்; போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பப்ஜி மதன் கேட்ட வரும் திங்கட்கிழமைக்குள் சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

யூட்யூபர் பப்ஜி மதனின் ஜாமின் மனு மீது காவல்துறை  பதில் அளிக்க  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமைக்குள் சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டுள்ளார். பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாச பேச்சுக்களை பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் தலைமறைவான மதன் கடந்த ஜூன் 18ல் தருமபுரியில் கைது செய்யப்பட்டார். தன் மீதான  குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் ஏதும் செய்யவில்லை  என்றும் அவர் தரப்பு வாதத்தில் முன்வைத்து வருகிறார்.

முன்னதாக, ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வந்தனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், சென்னை பெருங்களத்தூரில் தங்கி இருக்கிறார் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெருங்களத்தூர் விரைந்த போலீஸ், அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோர் மட்டுமே இருக்க, அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை மதன்குமார் நடத்தியுள்ளார். இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவு உணவகத்தில் வருவாய் இல்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த மதன், கடைக்கு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி இருந்த போதே மதன் தலைமறைவாகியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த வாடகை பாக்கி ரூ.2 லட்சம். அந்த கட்டடத்தின் உரிமையாளரான கஜபதி என்பவர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்து, அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதன் பிறகு தான், மதன் தீவிரமாக பப்ஜி விளையாட்டில் இறங்கி பணம் பார்க்கத்துவங்கியுள்ளார். தனது உருவத்தை வெளியிட்டால் தன்னை தேடும் கடன்காரர்கள் மற்றும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக தான், தன்னை அடையாளம் தெரியாத நபராக கடைசி வரை காட்டிக்கொள்ள முயற்சித்திருக்கிறார். கடைசியில் அது தான் தனது தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதி, அதை தனது அடையாளமாகவும் மாற்றிக்கொண்டார் என்கிற விபரம் தெரியவந்தது. 

தலைமறைவாக இருந்த மதன் தர்மபுரியில் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரகசியமாக சென்று குற்றப்பிரிவு போலீசார், பதுங்கியிருந்த மதனை கையும் களவுமாக பிடித்தனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின், சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read: PUBG Madan's Bail Petition: யூ - டியூபர் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget