மதுரை : மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ; பிளேடு காயங்களுக்கு சிகிச்சை
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் - பிளேடால் உடலில் காயம் ஏற்படுத்திகொண்டதால் பரபரப்பு - மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் சிறையில் முதல் தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையின்போது சாப்பிட வந்த சிறைவாசிகள் இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் - பிளேடால் உடலில் காயம் ஏற்படுத்திகொண்டதால் பரபரப்பு - மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறை வளாகத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.#abpnadu #madurai #jail #crime #issue #police pic.twitter.com/eqHt6tZoP0
— Arunchinna (@iamarunchinna) December 29, 2021























