மேலும் அறிய
Advertisement
பிரபல சென்னை ரவுடி சிறையில் தற்கொலை முயற்சி... உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்த சென்னை ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மத்திய சிறை ஜெயில் துணை கண்காணிப்பாளரின் வீட்டை கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி தீவைத்து குடும்பத்துடன் கொலை செய்ய கூலிப்படை மூலம் முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் செல்போன் வைத்திருந்ததால் கண்டுபிடித்த சிறை துணை கண்காணிப்பாளர் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் தனசேகரன் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்த வழக்கில் எண்ணூர் தனசேகரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எண்ணூர் தனசேகரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்த எண்ணூர் தனசேகரன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டுவரப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் 21 பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அளவுக் கு அதிகமாக பிபி மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion