Chennai: விசாரணையில் அடுத்தடுத்து கிளம்பும் பகீர்! சிக்ஸ்பேக் மாடலிடம் சிக்கிய நடிகைகள்! போலீசார் ஷாக்!
பேஷன் ஷோ, விளம்பர வாய்ப்பு என பல்வேறு ஆசைகளைத் தூண்டி 20க்கும் மேற்பட்ட பெண்களை வலையில் வீழ்த்தி, பாலியல் ரீதியாக அத்துமீறிய மாடல் நடிகையை மிரட்டி பல லட்சம் ரூபாயை சுருட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முகமது சையது. சிக்ஸ் பேக், மாடலிங் என சுற்றிவந்த முகமது அடிக்கடி பேஷன் ஷோ ஏற்பாடும் செய்தும் வந்துள்ளார். இந்த பேஷன் ஷோ மூலம் முகமதுவுக்கு பல இளம் பெண்களின் தொடர்பு கிடைத்துள்ளது. பேஷன் துறையில் வேலைபார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் நட்பு ரீதியாக முகமதுவிடம் பழகியுள்ளனர்.
விளம்பர வாய்ப்பு வாங்கித்தருவதாகவும், மாடலிங் துறையில் ஜொலிக்க வைக்கிறேன் எனவும் இனிக்க பேசிய முகமது தடுமாறிய பெண்களிடம் பாலியல் ரீதியாகவும் அத்துமீறியுள்ளார். காதலிப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று பேர்..
இந்நிலையில்தான் 3 பெண்கள் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களை காதலிப்பதாக தனித்தனியாக முகமது ஏமாற்றியதாகவும், வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார் கொடுத்த 3 பேரின் செல்போனில் இருந்தும் போலீசார் முகமதுவுக்கு ஒரு மேசேஜை தட்டிவிட மூன்று பேருக்குமே ஐ லவ் யூ என பதில் அளித்துள்ளார் முகமது. மூவரையும் தனித்தனி இடத்துக்கு வரக்கூறி தன்னுடைய சித்துவிளையாட்டையும் முகமது திட்டமிட்டார். இதனை அடுத்து தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்த வேப்பேரி போலீசார்முகமதுவை கைது செய்தனர்
இன்ஸ்டா மற்றும் வாட்ஸ் அப்..
தொடர்ந்து, முகமதுவின் இன்ஸ்டா வாட்ஸ் அப்பை போலீசார் ஆய்வு செய்தபோது, கடந்த 3 ஆண்டுகளில் 20 மேற்பட்ட பெண்களை வலையில் வீழ்த்தி அத்துமீறியது தெரிய வந்தது. இது மட்டுமன்றி தன்னிடம் இணங்கும் பெண்களை வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணமும் பறித்துள்ளார். அதே போல சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றும் நடிகைகளிடமும் முகமது தனது லீலைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “ முகமது சையது தான் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை மிரட்டி, பல லட்சம் ரூபாயை சுருட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசார் கூறும் போது, “ சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றிய எந்த நடிகையையும் விட்டு வைக்க வில்லை. சமீபத்தில் முகமது சையது சமூகவலைதளங்களில் தன்னை பின்பற்றிய 1,000 த்துக்கும் மேற்பட்டோரை நீக்கி உள்ளார். எதற்காக அவர் அவர்களை நீக்கினார் என கேள்வி எழுந்திருக்கிறது. தான் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை மிரட்டி, 1.50 லட்சம் ரூபாய் பறிக்க சென்ற போதுதான் முகமது சையதை கைது செய்தோம். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறது.இதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்”என்று கூறியுள்ளனர்.