Crime: பணம் அதிகம் கிடைக்கும்.. ஆசைகாட்டி இன்ஸ்டாவில் மோசடி.. 30 ஆயிரத்தை இழந்த மாணவி தற்கொலை!
சென்னையில் ஆன்லைன் முதலீடு மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மொபைல் ஆப் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் அதிகளவில் பணம் பிடுங்கும் வேலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை அளித்தும், அதிகபடியானவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும், இதிலும் சில மோசடியும் அவ்வபோது அரங்கேறியும் வருகிறது. மொபைல் ஆப் மற்றும் ஆன்லைனில் யூடியூப் பார்த்து ஒரு க்ளிக் செய்தால் பணம் உங்களது ட்ரேட் மூலம் என்று கூறி பணத்தை இழந்துவிடுவதாக கிரைம் துறை காவல்துறைக்கு புகார்கள் குவிக்கின்றனர். இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையில் ஆன்லைன் முதலீடு மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் மகாலட்சுமி என்ற கல்லூரி மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் இன்ஸ்டகிராம் விளம்பரத்தை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 30,000 இழந்தது தெரியவந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி வீட்டில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணின் மேற்கு வங்காளத்தை சார்ந்த 3 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தீவிர விசாரணையில் அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்தி மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தற்கொலை தீர்வல்ல..!
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).