Video: பட்டாசு மீது அமர்ந்தால் ஆட்டோ பரிசு : பந்தயத்தில் இளைஞர் உயிரிழந்த சோகம்: எங்கு?, என்ன நடந்தது ?
Bengaluru Cracker Bet: பெங்களூருவில் தீபாவளி தினத்தன்று, பட்டாசு பந்தயத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்
பெங்களூருவில் தீபாவளி தினத்தன்று, நண்பர்களுடன் பந்தயம்கட்டும் சவாலின் போது சக்தி வாய்ந்த பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரைக் கொடுத்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு - பந்தயம்:
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சபரீஷ் என்ற இளைஞர், தனது நண்பர்களிடம் சவால் ஒன்றை ஏற்றுள்ளார். சக்தி வாய்ந்த பட்டாசு மீது அமர்ந்து வெடிக்க வைப்பதுதான், அந்த பந்தயம். அந்த பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா கொடுக்கப்படும் எனவும் பந்தயத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உயிரை பறித்த பந்தயம்:
இந்த பந்தயத்தை சபரீஸ் ஏற்றுக் கொண்டு பட்டாசு மீது அமர்ந்திருக்கிறார்.பட்டாசு வெடித்ததில், அவருடைய உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி இறந்துவிட்டார்.இச்சம்பவத்தின் மது அருந்தியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
In a heartbreaking incident in Konanakunte, 32-year-old Shabarish tragically lost his life when a box of firecrackers exploded beneath him. According to reports, Shabarish’s friends had dared him to sit on the box filled with firecrackers, promising to buy him an autorickshaw if… pic.twitter.com/PerMA6AP3q
— Karnataka Portfolio (@karnatakaportf) November 4, 2024
அந்த காட்சியில் சபரீஸ் ஒரு செவ்வக வடிவ பட்டாசு பெட்டியில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவரது நண்பர்கள் அவரைச் சூழ்ந்து, பட்டாசை பற்றி வைக்கின்றனர். அதனையடுத்து, சபரீசை தவிர அவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக அங்கிருந்து புறப்பட்டனர்.
தனியாக அமர்ந்த சபரீஷ், பட்டாசு வெடிக்கும் வரை, சில வினாடிகள்காத்திருந்து பிறகு, பட்டாசு வெடித்தது. அடர்ந்த புகைமூட்டத்தின் நடுவே அவனது நண்பர்கள் ஓடி வந்து அவனைப் பார்த்தனர். அதற்குள் சபரீஷ்சாலையில் சரிந்து விழுவதை பார்க்க முடிகிறது.
6 பேர் கைது :
இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று காவல்துறை துணை ஆணையர் லோகேஷ் தெரிவித்திருக்கிறார். மேலும் , இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணத்தில்,தேவையற்ற விபரீத பந்தயத்தால், ஒருவர் உயிரையே இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.