Crime: காதலிப்பதாக கூறி டின்னருக்கு அழைத்து கொடூரம்.. செவிலியர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை..
பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தனது நண்பர்களை அழைத்து உதவியை நாடினார்.
பெங்களூருவில் நர்ஸ் ஒருவரை நான்கு நீச்சல் வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரியும் அவர் உயிர் பிழைத்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸார், நான்கு தொழில்முறை நீச்சல் வீரர்களை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 வயது உடையவர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரஜத்துடன் டேட்டிங் செயலியில் நட்பாக பழகி, நியூ பெல் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு உணவுக்காக அவரைச் சந்தித்தார். பின்னர், ரஜத் அவரை தனது அறைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரின் நண்பரை அறைக்கு அழைத்துள்ளார். அப்பெண் அறைக்குச் சென்ற பிறகு, நான்கு இளைஞர்களும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் டெல்லியைச் சேர்ந்த ரஜத், ஷிவ் ராணா, தேவ் சரோஹா மற்றும் யோகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டனர். பெங்களூருவில் பயிற்சி பெற்று வந்த அவர்கள் தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தனது நண்பர்களை அழைத்து உதவியை நாடினார். அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு மீட்கப்பட்டார். பின்னர் அவர் சஞ்சய்நகர் போலீசில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஜத்தும், ஷிவ் ராணாவும் கடந்த மூன்று மாதங்களாக அந்த ஊரில் இருந்ததாகவும், குற்றம் நடந்த அறையை வாடகைக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் நண்பர்களான தேவ் சரோஹா மற்றும் யோகேஷ் குமார் ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பு நீச்சல் பயிற்சிக்காக இவர்களுடன் சேர்ந்துள்ளனர்.
காவல் துறையின் புகாரை அறிந்ததும் குற்றவாளிகள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நான்கு பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கர்நாடக தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
ரஜத் நகரத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும், பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொரு குற்றவாளி பசவனகுடி அருகே தடுத்து வைக்கப்பட்டதாகவும், மற்ற இருவரும் சிக்பேட் அருகே தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்