Crime: காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்த மனைவி..! உள்ளே தள்ளிய போலீஸ்..! நடந்தது என்ன?
குத்தாலத்தில் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மனைவி மற்றும் அவரது காதலரை குத்தாலம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அன்றாட செய்திகளில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக எங்கோ ஒரு பகுதியில் தினந்தோறும் ஏதேனும் ஒரு குற்றச்சம்பவங்கள் நடந்தேறுவது நாம் கண்டு வருகிறோம். காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதற்கு ஏற்றார் போல், கள்ளக்காதலும் கண்களை மறைப்பதுடன் பலரது வாழ்கையை பாழாக்கி வருகிறது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் நட்பை கடந்து தகாத உறவு மேற்கொண்டு, அதனால் கணவன் மனைவியை கொலை செய்வதும், மனைவி கணவனை கொலை செய்வதும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.
கழுத்து அறுத்து தப்பியோட்டம்:
அதுபோன்ற சம்பவம் ஒன்றுதான் மயிலாடுதுறையில் நடந்தேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்தவர் 30 வயதான சரவணன். இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்கிற 25 வயதான தாட்சாயணி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி அன்று திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் கடந்த 5 -ம் தேதி சரவணனை, மனைவி தாட்சாயணி மற்றும் அவரது ஆண் நண்பரான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ராஜசேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
100 Day Work: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு..! எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு அரசு அதிரடி
இதுகுறித்து சரவணன் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தாட்சாயணி, அவரது ஆண் நண்பர் ராஜசேகரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்ததும், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் தாட்சாயணி, சரவணனை திருமணம் செய்து கொண்டதும், திருமணத்திற்கு பிறகும் தாட்சாயிணி ராஜசேகருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து சரவணன் கண்டித்துள்ளார்.
TN Exams: கொளுத்தும் வெயில்; தொடக்கநிலை வகுப்புகளுக்கு தாமதமாகும் தேர்வு? - பொங்கிய அன்புமணி
இதனால் ஆத்திரமடைந்த தாட்சாயிணி, ராஜசேகரை வரவழத்து இருவரும் சேர்ந்து சரவணன் கட்டிப்போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து தாட்சாயிணி, ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குத்தாலம் காவல்துறையினர் பின்னர் அவர்களை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற