மேலும் அறிய

IPL Orange cap: 15 ஆண்டுகால ஐபிஎல் வரலாறு..! அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்கள் யார்? யார்?

15 ஆண்டுகால ஐ.பி.எல். தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும், ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆரஞ்சு தொப்பி:

ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது. அந்த விருது வென்ற வீரர்களுக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடர் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் ஒரே அணிக்காக மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்துள்ளார்.

1. ஷான் மார்ஷ் - பஞ்சாப், 2008

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர் ஷான் மார்ஷ் அரஞ்சு கேப்பை வென்றார். அந்த தொடரில் 5 அரைசதங்கள், ஒரு சதம் உட்பட 616 ரன்களை சேர்த்தார். அதிகபட்சமாக 115 ரன்களை சேர்த்தார்.

2. மேத்யூ ஹேடைன் - சென்னை, 2009

2009ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஹைடன், 572 ரன்களை விளாசினார். அதிகபட்சமாக 89 ரன்கள் உட்பட 5 அரைசதங்கள் விளாசி, ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

3. சச்சின் டெண்டுலகர் - மும்பை, 2010

2010ம் ஆண்டு மும்பை அணிக்காக தலைமை தாங்கி விளையாடிய சச்சின் டெண்டுல்கர் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். தொடர் முடிவில் 5 அரைசதங்கள் உட்பட 618 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார்.

4. கிறிஸ் கெயில் - பெங்களூரு, 2011,12

2011ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாவிட்டாலும், காயமடைந்த ஒருவருக்கான மாற்று வீரராக பெங்களூரு அணியில் கெயில் இணைந்தார். அதைதொடர்ந்து 2011ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக கெயில், 3 அரைசதங்கள், 2 சதங்கள் உட்பட 608 ரன்களை விளாசினார். அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 107 ரன்கள் ஆகும். அதைதொடர்ந்து, 2012ம் ஆண்டு தொடரிலும் 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 733 ரன்களை விளாசினார். இதன் மூலம் அடுத்தடுத்து ஆரஞ்சு கேப்பை வென்ற வீரர் மற்றும் இரண்டு முறை ஆரஞ்சு கேப்பை வென்ற முதல் வீரர் எனும் பெருமையை கெயிலை பெற்றார்.

5. மைக்கேல் ஹஸ்ஸி - சென்னை, 2013

2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஹஸ்ஸி, 6 அரைசதங்கள் உட்பட 733 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்பை வென்றார். இதன் மூலம் ஒரு தொடரில் தனிநபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் எனும் கெயிலின் சாதனையை ஹஸ்ஸி சமன் செய்தார்.

6. ராபின் உத்தப்பா - கொல்கத்தா, 2014

ஐபிஎல் 7வது சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய உத்தப்பா, 5 அரைசதங்கள் உட்பட 660 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வென்றார். இந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 83.

7.டேவிட் வார்னர் - ஐதராபாத், 2015,17,19

ஐதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட டேவிட் வார்னர், 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆரஞ்சு கேப்பை வென்று சாதனை படைத்தார். அந்த ஆண்டுகளில் முறையே 562, 641 மற்றும் 692 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு கேப்பை மூன்று முறை வென்ற ஒரே வீரர் எனும் சாதனையை வார்னர் தன்னகத்தே கொண்டுள்ளார்.

8. விராட் கோலி - பெங்களூரு, 2016

2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, 973 ரன்களை விளாசினார். இதில் 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். இது இன்றளவும் யாராலும் தகர்க்க முடியாமல்,  ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரு நபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது.

9. கேன் வில்லியம்சன் - ஐதராபாத் , 2018

11வது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய வில்லியம்சன், 8 அரைசதங்கள் உட்பட 735 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வென்றார். அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 84  ரன்கள் ஆகும்.

10. கே.எல். ராகுல் - பஞ்சாப், 2020

2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட ராகுல், அந்த தொடரில் 670 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வென்றார்.  அந்த தொடரில் அவர் 5 அரைசதங்கள், ஒரு சதம் விளாசினார். அதிகபட்ச ஸ்கோர் 132 ரன்கள் ஆகும்.

11. ருத்ராஜ் கெய்க்வாட் - சென்னை, 2021

14வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இளம் வீரரான கெய்க்வாட், 635 ரன்களை சேர்த்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். அவரது அந்த தொடரில் அதிகபட்ச ஸ்கோர் 101 ரன்கள் ஆகும்.

12. ஜாஸ் பட்லர், ராஜஸ்தான், 2022

15வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய பட்லர், 4 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 863 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை தனதாக்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget