மேலும் அறிய

அண்ணா பல்கலைக்கழக்கத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்.. தனியார் அமைப்பைச் சேர்ந்த ஹரீஷ் கைது

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச  ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக்கத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய சம்பவத்தில் தனியார் அமைப்பைச் சேர்ந்த ஹரீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச  ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன மாஸ்டர் சாண்டி, ஸ்டாண்ட் அப் காமெடியன் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் பட்டம் ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்

ஆனால் நிகழ்ச்சிக்கு நேரில் வரமுடியாத நடிகர் வடிவேலுக்கு நேரில் சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை  நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையாக மாறியது. காரணம் பொதுவாக பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்பட வேண்டிய கௌரவ டாக்டர் பட்டம் தனியார் அமைப்பு பெயரில் வழங்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தொடங்கி, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவது வரை அனைத்தும் மோசடியாக நடைபெற்றது தெரிய வந்தது. 

இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகமும், ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் போலீசில் புகாரளித்தனர். அதனடிப்படையில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தனிப்படை அமைத்து  போலீசார் தேடிய நிலையில் ஆம்பூர் அருகே பதுங்கியிருந்த ஹரீஷ், இடைத்தரகர் கருப்பையா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget