கரூர் அருகே விபரீதம்.. நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..
அப்போது உடன் இருந்த இளமுருகன் தவறி 25 அடி ஆழமுள்ள தண்ணீரில் விழுந்தார். அவர்களின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.
கரூர் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டம் பாகநத்தத்தை அடுத்து அவுத்திபாளையம் கிராமத்தை சார்ந்தவர் சரவணன். இவருக்கு இளமுருகன் (வயது 8) என்ற மகனும், ஓவியா (வயது 14) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு பள்ளி விடுமுறை என்பதால் மூக்கணாங்குறிச்சி கிராமத்தை அடுத்த தம்மநாயக்கன்பட்டியில் உள்ள அவர்களது பெரியம்மாமணி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்று மதியம் பெரியம்மா மணி, இளமுருகனையும், ஓவியாவையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சுப்பிரமணி என்பவரின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிச்சல் பழகி கொண்டிருந்தனர்.
அப்போது உடன் இருந்த இளமுருகன் தவறி 25 அடி ஆழமுள்ள தண்ணீரில் விழுந்தார். அவர்களின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், சிறுவனை மீட்க முடியாததால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடி சிறுவனின் உடலை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் விவசாய கொலை வழக்கில் கல்குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி.
விவசாயி கொலை வழக்கில் கல்குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனு ஐ-கோர்ட் கிளையில் தள்ளுபடி ஆனது. கரூர் மாவட்டம் காளிபாளையம் வெட்டுக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் 49. விவசாயியான இவர் அப்பகுதியில் உரிமம் காலாவதியான குவாரி செயல்படுவது குறித்து புகார் அளித்துள்ளார். இதனால் கடந்த செப்டம்பர் 10 டூவீலரில் சென்ற ஜெகநாதனை வேன் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுநர் சக்திவேல், கல்குவாரி ஊழியர் ரஞ்சித், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் ஐ-கோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. வழக்கு விசாரணை நிலவில் நிலுவையில் உள்ளது. ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்றார். அதே நேரம் கொலையான ஜெகநாதனின் தாய் வள்ளியாத்தாள் தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இணையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து செல்வகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.