’எங்க அம்மாவ கொன்னுட்டேன்’ போலீசில் சரணடைந்த 15வயது சிறுவன்
சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தாயை கொன்றதாக சரண் அடைந்தார் அந்த சிறுவன். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொடந்தாலமன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். கவரிங் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் பாலமுருகனுக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 வயதில் திருமூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கீதா வீட்டில் வேறு ஒரு நபருடன் திருமணத்திற்கு வெளியேயான உறவில் ஈடுபட்டதாகவும் . அதனை பார்த்த 15 வயது மகனிடம் தாயிடம் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா மூன்று தினங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த கத்தியால் சங்கீதாவை கொடூரமாக வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
அதனையடுத்து அருகிலுள்ள சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தாயை கொன்றதாக சரண் அடைந்தார் அந்த சிறுவன். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் சங்கீதாவின் கணவர் பாலமுருகனும் இருந்ததாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் கூறினர். இதனையடுத்து கொலையில் சங்கீதாவின் கணவர் பாலமுருகனுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.