மேலும் அறிய

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

மரியசெல்வம் உள்ளிட்ட 5 பேருக்கு தலா 10 ஆண்டுகளும் முத்துக்குமாருக்கு 9 ஆண்டுகளும் கூல்மணி என்கிற மணிகண்டனுக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

மன்னார்குடி அருகே துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி நீதிமன்றம் தீர்ப்பு..
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அசேஷத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவே இருப்பதை பல நாட்களாக நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி மதிய உணவு நேரத்தில்  திடீரென துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தரையில் சுட்டும், வங்கி மேலாளர் கோவிந்தராஜனை துப்பாக்கி முனையில் மிரட்டியும் 5.58 லட்சம் ரொக்கம் மற்றும் லாக்கரில் இருந்த 2.51 லட்சம் மதிப்புள்ள 84 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் போலீசார் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் உத்தரவின் பேரில் 4 தனிப்டைகள் அமைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை புலனாய்வு செய்து தேடினர். தொடர் புலனாய்வில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை முதலில் கைது செய்தனர்.
 
அவர்கள் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம் (35), முத்துக்குமார் (31), மீரான்மைதீன் (32), சுடலைமணி (31), திருவாடானையை சேர்ந்த ராஜா (35), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த அயூப்கான் (29), மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல் மணி என்கிற மணிகண்டன் (25) ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
இதுகுறித்த வழக்கு மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரனை முடிவடைந்து நேற்று இரவு சார்பு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமாவதி தீர்ப்பளித்தார். இதில் மரியசெல்வம், மீரான் மைதீன், சுடலைமணி, ராஜா, அயூப்கான் ஆகிய 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து திர்பளித்தார். மேலும் முத்துக்குமாருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கூல்மணி என்கிற மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆர்.எஸ்.ஜெய்சங்கர் ஆஜராகி வாதாடினார். 

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து  குற்றவாளிகளில் மணிகண்டன் தவிர 6 பேர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூல்மணி என்கிற மணிகண்டன் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மன்னார்குடியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மூன்றாண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Mahindra THAR: என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
Embed widget