மேலும் அறிய
Advertisement
கொலை..தொட்டிக்குள் செல்போன்.. இறுதி சடங்கில் அழுகை - உரிமையாளர் கொலையில் சிக்கிய பணிப்பெண்!
5பவுன் நகைக்காக ஜோஸ்பின்மேரியை வீட்டில்வேலை பார்த்த ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்துவி்ட்டு, நகையை திருடியதும், அவரது செல்போனை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் வீசியிருந்ததும் தெரியவந்தது.
தஞ்சாவூரில் 5 பவுன் நகைக்காக வீட்டு உரிமையாளரை கொலை செய்த பணிப்பெண் மற்றும் கணவர் கைது. கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக காவல்துறையினர் விசாரணையில் தகவல்
தஞ்சாவூரில் 5 பவுன் நகைக்காக வீட்டு உரிமையாளரை கொலை செய்த வீட்டு பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி ஜோஸ்பின்மேரி (65). இவர்களுடைய மகன் பிராங்க்ளின். இவர் மதுரை ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். அந்தோணிசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தஞ்சாவூரில் ஜோஸ்பின்மேரியும், அவருடைய மகன் பிராங்க்ளினும் வசித்து வந்தனர். கடந்த 14-ம் தேதி மதுரைக்கு பிராங்க்ளின் வேலைக்கு சென்று விட்டார்.
15-ம் தேதி இரவு ஜோஸ்பின்மேரியை செல்போனில் மகன் தொடர்புகொள்ள முயன்ற போது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டின் மற்றொரு பகுதியில் வாடகைக்கு வசிப்பவர்களிடம் அம்மா போன் எடுக்கவில்லை என கூறி அம்மாவை பேச சொல்லுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து வாடகை வீட்டில் வசித்தவர்கள் ஜோஸ்பின்மேரி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு சோபாவில் இறந்தநிலையில் காணப்பட்டார். அடிக்கடி அம்மாவிற்கு காக்கா வலிப்பு வந்ததால் ஜோஸ்பின்மேரி இறந்திருக்கலாம் என பிராங்களின் கருதினார். மேலும், அவர் அணிந்திருந்த 5 பவுன் எடையுள்ள செயின், வளையல் ஆகியவற்றை காணவில்லை என்பதால் காவல்துறையினரிடம் இதுகுறித்து விசாரிக்கும் படி பிராங்களின் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் ஜோஸ்பின்மேரியின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ஜோஸ்பின்மேரி கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வந்தது. இதையடுத்து வீட்டில் வேலைப்பார்க்கும் மனோஜிப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியடென்சி(34) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசிய ஆரோக்கியடென்சியிடம் காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவர் 5 பவுன் நகைக்காக ஜோஸ்பின்மேரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவி்ட்டு, நகையை திருடியதும், அவரது செல்போனை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் வீசியிருந்ததும் தெரியவந்தது.
பின்னர் ஜோஸ்பின்மேரி இறந்ததும், அவரது உடலைப் பார்த்து கதறி அழுததும், இறுதிச் சடங்கின்போது எதுவும் தெரியாதது போல் கலந்து கொண்டதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியடென்சியை காவல்துறையினர்கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவத்தில் ஆரோக்கியடென்சியின் கணவர் யோபேல் விக்டர் உடந்தையாக இருந்தது காவல்துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணே உரிமையாளரை கொலை செய்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion