மேலும் அறிய

Crime: கடற்கரையில் கொலை செய்யப்பட்ட 3 பெண்கள்.. இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..

ஈக்வடார் நாட்டில் கடற்கரைக்கு சுற்றுலாச் சென்ற 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈக்வடார் நாட்டில் கடற்கரைக்கு சுற்றுலாச் சென்ற 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈக்வடார் நாட்டில் உள்ள குயின்ண்டே அருகே எஸ்மரால்டாஸ் கடற்கரையில் நாய் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடத்தை மோப்பம் பிடித்ததையும், சுற்றி சுற்றி வந்ததையும் மீனவர்கள் கவனித்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று அங்கு என்ன உள்ளது என பார்த்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீச உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  துர்நாற்றம் வந்த இடத்தை தோண்டி பார்த்தப்போது அங்கு 3 இளம்பெண்கள் கொன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் , கொலை செய்யப்பட்டவர்கள் டொமிங்கோவைச் சேர்ந்த டெனிஸ் ரெய்னா,யூலியானா மசியாஸ்,நயேலி டாபியா  என்பது தெரிய வந்தது. 

இதனையெல்லாம் விட தங்களுக்கு ஆபத்து நேரப்போகிறது என்பதை உணர்ந்த இந்த 3 பேரில் இரண்டு பேர் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். டெனிஸ் தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், “ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்” என கூறியுள்ளார். 

இதேபோல் நான்கு வயது மகளைக் கொண்ட டாபியா தனது சகோதரிக்கு, தனது  இருப்பிடத்தை குறிப்பிட்டு வாட்ஸ்அப் செயலில் செய்தி அனுப்பியுள்ளார். அதில் சும்மா உனக்கு நான் தகவல் தெரிந்து கொள்வதற்காக அனுப்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த 3 பெண்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தனர்.  பெண்கள் கடற்கரைக்கு கொண்டு வந்த ஆடைகள் மற்றொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைகள் கட்டப்பட்டு, வாயும் மூடப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் ஒரு மொபைல் ஃபோனையும் மீட்டெடுத்துள்ளனர். இது நிச்சயம் கொலையாளிகளை கண்டறிய உதவும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பியது வைத்து பார்த்தால் இந்த கொலைகள் ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவர்களில் மசியாஸ் ஒரு பாடகி என்பது,  ரெய்னா ஒரு பொறியியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. .

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget