Gokulraj murder case: கடத்தி கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ்.. மாற்றிப்பேசிய சுவாதி - தீர்ப்பில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களும் வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் - மதுரை சிறப்பு நீதிமன்றம் https://t.co/wupaoCQKa2 | #GokulrajMurderCase #Gukulraj pic.twitter.com/ZiVrVK4uwj
— ABP Nadu (@abpnadu) March 5, 2022
அதில், யுவராஜ், அருண் செந்தில், அருண் குமார், சங்கர், செல்வக்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களும் வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து பேசி இருக்கும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பா.பா மோகன், “கோகுல்ராஜை மிரட்டி தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து பின்னர் கொலை செய்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி, பின்னர் மாற்றிப்பேசினார். இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில், அமுதரசி என்பவர் அப்ஸ்காண்ட்டாக இருந்தவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே, இதில் மொத்தம் 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், முக்கியமான சாட்சியான சுவாதி மாற்றி பேசினாலும் கூட இறுதியில் சாட்சியம் வென்றுள்ளது. சாட்சிகள் மாறினாலும் சாட்சியம் வென்றுள்ளது. சிசிடிவி கேமராவின் வீடியோ மிக முக்கியமான சாட்சியாக பார்க்கப்படுகிறது. 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 500 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்