மேலும் அறிய

காண்டம், சிப்ஸ், பால்… புத்தாண்டுக்கு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவை என்ன தெரியுமா?

பிரபல இ காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்க் இட் மற்றும் ஸ்விகி ஆகியவற்றில் இந்தியர்கள் அதிகம் வாங்கியது என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்துக்காக இந்தியர்கள் அதிகம் வாங்கியவை என்னென்ன தெரியுமா?

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உறவுகளும் நண்பர்களும் பிறருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ந்து வருகின்றனர். இந்தியாவும் 2025ஆம் ஆண்டை கடந்த இரவில் குதூகலத்துடன் வரவேற்று, கொண்டாடித் தீர்த்தது. வீடுகளிலும் வெளியிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

இந்த நிலையில், பிரபல இ காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்க் இட் மற்றும் ஸ்விகி ஆகியவற்றில் இந்தியர்கள் அதிகம் வாங்கியது என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தது என்ன? (What Indians ordered on New Year’s Eve 2024)

எல்லோரும் எதிர்பார்த்தது போல, ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் நிறையப் பேர் நொறுக்குத் தீனிகளையே அதிகம் வாங்கி இருக்கின்றனர். குறிப்பாக இரவு 8 மணி அளவில், , Blinkit செயலியில், ஆலு புஜியா எனப்படும் உருளைக்கிழங்கு நூடுல்ஸ் பாக்கெட்டுகள் 2.3 லட்சம் விற்றுத் தீர்ந்தன.

அதேபோல Swiggy Instamart செயலில் 7.30 மணி அளவில் ஒரு நிமிடத்தில் 853 ஆர்டர்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.  அதேபோல பால், சிப்ஸ், சாக்லேட், திராட்சை, பனீர் ஆகியவை அதிகம் தேடப்பட்டு இருக்கின்றன.

அதேபோல ஐஸ் க்யூப்களும் குளிர்பானங்களும் அதிகம் தேடப்பட்டவையாக உள்ளன.  பிளிங்க் இட் செயலில் நேற்று இரவு 8 மணிக்கு, 6,834 பாக்கெட் ஐஸ் க்யூபுகள் வாங்கப்பட்டுள்ளன.

1.2 லட்சம் பாக்கெட் காண்டம்

அதேபோல, டிசம்பர் 31 மாலையில் ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் 4,779 பாக்கெட் காண்டம்கள் விற்றுத் தீர்ந்தன. பிளிங்க் இட் செயலியும் காண்டம் விற்பனை அதிகரித்ததாக அதன் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா தெரிவித்துள்ளார். 1.2 லட்சம் பாக்கெட் காண்டம்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்

Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?

Embed widget