பட்ஜெட் 2022: GST வரியை குறையுங்கள்; பான் கார்டு வரம்பை உயர்த்துக - நகை வியாபாரிகள் கோரிக்கை
Union Budget 2022: தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களின் மீதான GST வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களின் மீதான GST வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Budget 2022) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். எல்லா துறைகளைப் போன்றும் ஆபரணத் துறையும் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் மீதான GST வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இது போன்று GST வரி குறைக்கப்பட்டால், பான் கார்டு வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக வரியை குறைக்க வேண்டும். மேலும் ஓமிக்ரான் நோய் பெரியதாக பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை. இதனால் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு குறித்தான பேச்சுக்கள் பெரிதாக இல்லை. இந்தியாவின் ஆபரண நகை வியாபாரிகளின் வணிகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தொற்று நோய் பாதிப்பை ஏற்படுத்து உள்ளது. முன்னதாக ஊரடங்கு தடை விதிக்கப்பட்டதால் சில்லறை வணிகத் துறை இன்றுவரை மந்தமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் நகைகளுக்கு அதிகம் செலவு செய்வதில்லை.
எந்தவொரு துறை அதிகாரிகளாலும் விசாரிக்கப்படாமல், தங்கம் பணமாக்குதல் திட்டத்தின் (ஜிஎம்எஸ்) கீழ் ஒரு தனிநபர் டெபாசிட் செய்யக்கூடிய தங்கத்தின் குறைந்தபட்ச அளவு குறித்து தகுந்த விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று நகை வியாபாரிகள் சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. மேலும் 22 காரட் தங்க நகைகளை வாங்குவதற்கான EMI வசதியை அனுமதிக்க வேண்டும். இது தொற்று நோய்க்குப் பிறகு தொழில் துறை வணிகத்தின் கணிசமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் நகை வியாபாரிகள் சங்கம் கோரி உள்ளது.
நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஆஷிஷ் பேத்தே கூறுகையில், “தொற்று நோயின் இந்த கடினமான காலங்களில் எங்களது தொழில் துறை மிகவும் பாதிக்கப்பட் உள்ளது. வருமான வரிச் சட்டத்தின் 40A பிரிவில் மாற்றங்கள் வேண்டும். இதனால் தற்போது உள்ள தினசரி வரம்பு ரூ.10,000 ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். கிரெடிட் கார்டுகள் மூலம் நகைகளை வாங்கும்போது வங்கிக் கமிஷன் (1-1.5%) தள்ளுபடி செய்ய வேண்டும். விற்கப்பட்ட நகைகள், புதிய நகைகளில் மீண்டும் முதலீடு செய்யப்பட்டால், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 54F இன் படி மூலதன ஆதாயத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை நீட்டிக்க வேண்டும்” என்று நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஆஷிஷ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.