மேலும் அறிய

Petrol, Diesel Price: 100 நாட்களை கடந்து விலைமாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்..!

சென்னையில் 100 நாட்களை கடந்து விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று, சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 101ஆவது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்தபோதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. 

கச்சா எண்ணெய்:

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசியா நாடுகளில் (ஏமன்- சவுதி அரேபியா) தற்போது பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் விலை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 17ம் தேதி நிலவரப்படி, சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை  ஒரு பீப்பாய்க்கு 85.6 அமெரிக்க டாலராகும். இது, கடந்த 2014 ஆண்டிற்கு பிறகு, பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உயர்வாகும். மேலும், மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

இறக்குமதி செலவு அதிகரித்தால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) மேலும் மோசமடையக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரியத் தொடங்கும். 

Petrol, Diesel Price: 100 நாட்களை கடந்து விலைமாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்..!
 
கச்சா எண்ணெயின் உயர்வால், நாட்டின் பணவீக்கம் (தயாரிப்புச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக ) அதிகரிக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ அதிகரிக்கும். இதன் மூலம், தொழில் நிறுவனங்கள் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும். கடன் வாங்குவதை தொழில் நிறுவனங்கள் குறைத்தால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி குறையத் தொடங்கும். உற்பத்தி, சேவை  விவசாயம் என அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கக் கூடும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்  விலை சரியத் தொடங்கியதால், கடந்தாண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்தது. மீண்டும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், நாட்டில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், மீண்டும் கலால் வரி  உயர்த்தப்படலாம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகப் பெரிய சிக்கலாக இருக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Embed widget